பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் கூட்டமைப்பு சைகை மூலம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முரளிதர் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீத அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள தங்களுக்கு தொகுப்பேடு வழங்கிட வேண்டும்.

மாதாந்திர உதவித் தொகை ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சைகை மொழி மூலம் வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காது கேளாதோர் கூட்டமைப்பினரை திருவள்ளூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு நேரில் சந்தித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்து பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: