சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு பகுதியை 16 வயது சிறுமி சூளைமேடு பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு  கடந்த 24ம் தேதி சென்றாள். ஆனால் அவளை திடீரென காணவில்லை.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், ஆவடியை சேர்ந்த சஞ்சய்குமார்(19) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்றது  தெரியவந்தது. மேலும் இருவரும் திருச்சியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. திருச்சி சென்ற போலீசார் இருவரையும் அழைத்து வந்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சய்குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: