பழநி அருகே கொடூரம், நாயை தலைகீழாக தொங்கவிட்டு டார்ச்சர்; வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பழநி: பழநியில் டூவீலரில் செல்லும் வாலிபர்கள் நாயை தொங்க விட்டபடி டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதில் பழநி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலரில் 2 வாலிபர்கள் செல்கின்றனர். பின்னால் அமர்ந்திருக்கும் வாலிபர், நாய் ஒன்றை தலைகீழாக தொங்க விட்டபடி பிடித்து செல்கிறார். மேலும், நாயை அங்குமிங்கும் வீசியபடி பெரியகடை வீதி வரை செல்கின்றனர்.

இதனை பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் படம் பிடித்துள்ளார். டூவீலரில் சென்ற வாலிபர்கள் இருவரும் போதையில் இருந்ததாக தெரிகிறது. நாயை வாலிபர்கள் டார்ச்சர் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாலிபர்களின் இச்செயலுக்கு பொதுமக்கள், விலங்கின ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வாலிபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: