ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டி நீரஜ்சோப்ரா; வெள்ளி வென்று புதிய சாதனை

ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார். முன்னதாக அவர் 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில் இன்று தனது சாதனையையே அவர் முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

 இந்த போட்டியில் உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் இந்த முறை 90.31 தூரம் வீசி தங்கம் வென்றார். அவர் இருமுறை 90 மீ தூரத்தை இந்த சீசனில் கடந்துள்ளார். ஜெர்மனியின் ஜூலியன் வீபர் தனது 5வது முயற்சியில் 89.08 மீ தூரம் எறிந்து வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜேகப் வாட்லீயிச் 88.59மீ தூரம் வீசி 4வது இடமே பிடிக்க முடிந்தது.

Related Stories: