கொரோனா நிதியில் முறைகேடு; அரசு அதிகாரி சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றியவர் ஜெயசீலி (60). இவர் நேற்று ஓய்வு பெற இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை புகாரின்பேரில் விசாரணை நடந்தது.

 ேமலும், மதுரை அலுவலகத்தில் பணியாற்றிய போது கொரோனா நிதியில் முறைகேடு செய்ததாகவும், அதேபோல் திண்டுக்கல்லிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளதால் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: