தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா பாதிப்பு, தமிழகத்தில் 5%-க்கும் கீழ் குறைவாகவே உள்ளது என்றும், பிற மாநிலங்களை விலை தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது குறித்தும், தொற்று பரவல் உச்சம் பெற்று தான் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த கருத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும், பாதிப்பு அதிகமானால் கோவிட் கேர் சென்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முதல்வர் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.          

Related Stories: