கோயில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: கோயில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் சொத்துக்களின் வாடகை வசூல் குறித்து ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கோயில் சிலை, சொத்து, நகை பாதுகாப்பு புனரமைப்பு தொடர்பாக ஐகோர்ட் விசாரித்து உத்தரவு பிறப்பித்த வழக்காகும். கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய 5 நபர்கள் கொண்ட குழு ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

Related Stories: