சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!: தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அலுவலர்கள்..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையில் நியமிக்கப்பட்ட மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் பணிகளை தொடங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஜூன் 23ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்க உத்தரவிட்டார்கள்.

அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் கண்காணிக்கவும், திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதை உறுதி செய்யவும் கீழ்க்கண்ட 15 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வ. எண்    மண்டலம்    அலுவலர்கள்    

1.    திருவொற்றியூர்    திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத், இ.ஆ.ப., அவர்கள் கூடுதல் இயக்குநர் வேளாண்மைத் துறை    

2.    மணலி    திரு.பி.கணேசன், இ.ஆ.ப., அவர்கள் திட்ட இயக்குநர் தமிழ்நாடு சாலைப் பிரிவு திட்டம்-2    

3.    மாதவரம்    திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநர்/ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்    

4.    தண்டையார்பேட்டை    டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., இயக்குநர் நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்    

5.    இராயபுரம்    டாக்டர் கே.விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் செயலாளர் மாநில மனித உரிமை ஆணையம்    

6.    திரு.வி.க.நகர்    திரு.ரஞ்சித் சிங், இ.ஆ.ப., அவர்கள் அரசு துணைச் செயலாளர் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை    

7.    அம்பத்தூர்    டாக்டர் எஸ்.சுரேஷ் குமார், இ.ஆ.ப., இயக்குநர் சிறுபான்மையினர் நலத்துறை    

8.     அண்ணாநகர்    திரு.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அரசு கூடுதல் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை    

9.    தேனாம்பேட்டை    திரு.கே.ராஜாமணி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு உப்பு நிறுவனம்    

10.    கோடம்பாக்கம்    திருமதி எம்.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அரசு கூடுதல் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை    

11.    வளசரவாக்கம்    டாக்டர் டி.மணிகண்டன் இ.ஆ.ப., அரசு இணைச் செயலாளர் பள்ளிக்கல்வித்துறை    

12.    ஆலந்தூர்    முனைவர் ஆர்.நந்தகோபால், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்    

13    அடையாறு    திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., செயல் இயக்குநர் சிப்காட்    

14.    பெருங்குடி    திரு.டி.ரவிச்சந்திரன், இ.ஆ.ப., உறுப்பினர் செயலர் மாநில சிறுபான்மையினர் ஆணையம்    

15.    சோழிங்கநல்லூர்    திரு.கே.வீரராகவ ராவ், இ.ஆ.ப., இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை    

மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் மற்றும் இதர திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றுவதை ஒருங்கிணைத்து பணிகளை கண்காணிக்க உள்ளனர்.

மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ளும் விதமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்தல், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்களைக் கண்டறிதல், மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளை மாநகராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் பணிகளை தொடங்கி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியும், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள், இதரத் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: