இந்தியாவின் வெளிநாட்டு கடன் 8% உயர்ந்து ரூ.49 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தகவல்

டெல்லி: இந்தியாவின் வெளிநாட்டு கடன் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் நடப்பாண்டில் குறுகிய கால வெளிநாட்டு கடன் 20 விழுக்காடு அதிகரித்து 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நீண்ட கால கடன் 5.6 விழுக்காடு அதிகரித்து 39 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மதிப்பு 8 விழுக்காடு அதிகரித்து மார்ச் மாதம் வரையில் 49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில் டாலரின் ஆதிக்கமே சரி பாதிக்கும் மேலாக 53.2 விழுக்காடாக உள்ளது. வெளிநாட்டு கடன் மதிப்பில் இந்திய ரூபாயில் 31.2 விழுக்காடும், யென் 5.4 விழுக்காடும், யூரோ 2.9 விழுக்காடும் பங்கு வகிக்கின்றன.

Related Stories: