திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹3.66 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹3.66 கோடியை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று 65,898 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,686 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் ₹3.66 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் பக்தர்களால் நிரம்பியது.

இலவச தரிசன வரிசையில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் இந்த மாதம் பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, வருகிற 10ம் தேதி முதல் ஏகாதசி சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. இதையொட்டி ஜூலை 13ம் தேதி குருபவுர்ணமி கருட சேவை, 17ம் தேதி ஆனிவார ஆஸ்தானம், 23ம் தேதி ஆண்டாள் திருவாடிப்பூரம் உற்சவம், 24ம் தேதி சர்வ ஏகாதசியும், 29ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, பிரதிவாதி பயங்கர அன்னாவின் வருட திருநட்சத்திர உற்சவம் நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: