மீஞ்சூர் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

பொன்னேரி: மீஞ்சூர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவுரைப்படி, நேற்று மாலை மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி இயக்குனர் கண்ணன் தலைமையில் செயல் அலுவலர் வெற்றி அரசு, இளநிலை உதவியாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப், கவர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மீஞ்சூர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரவலை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Related Stories: