புழல் பிரதான சாலையில் சுற்றித் திரியும் குதிரைகளால் வாகன விபத்துகள்

புழல்: புழல் பகுதியில் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு தெரு சாலைகளில் மாடுகள், குதிரைகள் சுற்றி திரிவதால், அங்கு வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அவற்றை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் காந்தி பிரதான சாலை மற்றும் பல்வேறு தெரு சாலைகளில் ஏராளமான மாடுகள், குதிரைகள் எந்நேரமும் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி திரிகின்றன.

இதனால் காலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும்போது, சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் உள்பட முதியவர்களை மாடுகள், குதிரைகள் விரட்டி செல்கின்றன. இதனால் அவர்கள் உயிர் பயத்தில் தப்பி ஓடும் அவலநிலை நீடித்து வருகிறது. இதில் சிலர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

இதுபோன்று சுற்றி திரியும் மாடுகள், குதிரைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பிடித்து அடைப்பதில்லை.

எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, புழல் பகுதி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள், குதிரைகளை பிடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: