ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளை: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி: தென்காசி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரையும் அவரது மனைவியையும் கட்டிப்போட்டு 150 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அருணாச்சலமும், அவரது மனைவி சாய் சுவர்ணதேவியும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

இன்று அதிகாலையில் உள்ளே புகுந்த ஒரு கொள்ளை கும்பல் 2 பேரையும் கத்தி முனையில் மிரட்டி கைகளை கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 150 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து, தம்பதிகள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் 4 பேரும் முகமூடி அணிந்திருந்தாக கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், தம்பதிகளை கட்டிப்போட்டு, நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தென்காசி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.       

Related Stories: