தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,  திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்தது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கணித்திருக்கிறது. நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சின்கோனா-10, சின்னகல்லார்-9, வால்பாறையில்- 7 செ.மீ, மழையும் பதிவாகி உள்ளது. ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது. இன்றும், நாளையும் லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், இலங்கை கரையோரம் பலத்த காற்று வீசக்கூடும். 40-50 கி.மீ.வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக மீனவர்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Stories: