கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது :அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,000-ஐ தாண்டியுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் அரசின் விதிமுறையை பின்பற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா தடுப்பு தொடர்பான இன்றைய ஆலோசனையில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.மற்ற மாநிலங்களில் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது. கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 5% குறைவாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமானால் கோவிட் கேர் சென்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது. 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற பொறுப்பு தலைமைக்கு இருக்க வேண்டும். சமூக இடைவெளி, மாஸ்க் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டத்தை நடத்தலாம். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். 10க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: