கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் கறம்பக்குடி பேருந்தில் இருந்து வெள்ளாளவிடுதி, வேலாடிப்பட்டி, கொல்லம்பட்டி, மருங்கூரணி, சுந்தம்பட்டி, புதுப்பட்டி, காட்டு நாவல் ஆகிய ஊர்களிலிருந்தும் கந்தர்வகோட்டை நகர் பகுதியான காமராஜ் நகர், தென்றல் நகர், பெரியார் நகர், தெற்கு செட்டி தெரு ஆகிய பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தினசரி பள்ளிக்கு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

மேலும் ரோட்டின் ஓரங்களில் தனிநபர்கள் மண்ணையும், குப்பைகளையும் கொட்டி உள்ளதால் அந்த வழியே செல்லும் பொது மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமமாக உள்ளது. ஆகையால் ரோட்டில் தனியார் கொட்டியுள்ள வேஸ்ட் மண்ணை அகற்ற வேண்டும். இந்த சாலையை தார்சாலையாக அமைத்து தரவேண்டும். அப்பகுதி பொதுமக்களும் இந்த வழியே செல்லும் மாணவ- மாணவிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: