கொத்தகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்: பெற்றோர் வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை: கொத்தகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள கொத்தகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 50 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகிறனர். இப்பள்ளி இரு ஆசிரியர் பள்ளியாகும். ஊரின் மையப் பகுதியில் உள்ளதால் பள்ளி வகுப்பறைக்கும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும், பள்ளியின் உடமைகளுக்கும் எந்தவித பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

ஆகையால் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என பெற்றோர்களும், பள்ளி மாணவ- மாணவிகள் கூறுகிறனர். இதைப்பற்றி பள்ளி தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது சட்டமன்ற உறுப்பினரிடம் சுற்றுச்சுவர் வேண்டி மனு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.இதனை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்தோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்தோ உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பள்ளி வாளகத்தில் போதிய கழிவறை வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: