ரயில்வே போலிஸ், ஆர்.பி.எஃப். நடத்திய சோதனையில் 364 கிலோ கஞ்சா, 41 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை: ரயில்வே போலிஸ் மற்றும் ஆர்.பி.எஃப். கூட்டாக கடந்த 15 நாட்களில் நடத்திய சோதனையில் 364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்களாக நடத்திய சோதனையில் 41 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலிஸ் கூடுதல் இயக்குனர் வனிதா கூறியுள்ளார். மேலும் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: