தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் :நுபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!!

டெல்லி : நுபுர் சர்மாவின் பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டது. தனது தேவையற்ற வார்த்தைகளால் நாடு முழுவதும்  வன்முறை தீயை பற்ற வைத்து விட்டுள்ளார். நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா?. நுபுர்சர்மாவின் சர்ச்சை பேச்சால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

தமது கருத்துக்கு நுபுர் சர்மா, தொலைக்காட்சியில் தோன்றி தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீதித்துறை சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றி பேச நுபுர் சர்மாவுக்கும் தொலைக்காட்சிக்கு என்ன வேலை?.உதய்பூர் படுகொலைக்கு நுபுர்சர்மாவின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணம். ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. நுபுர் சர்மா அளித்த புகாரில் ஒருவரை துரிதமாக காவல்துறை கைது செய்தது.நுபுர் சர்மாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவானாலும் டெல்லி காவல்துறை கண்டுகொள்ளவில்லை. நுபுர் சர்மா வழக்கு பற்றி இதுவரை டெல்லி போலீஸ் என்ன செய்தது?, என்று காட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து தனக்கு எதிராக பிற மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றக் கோரிய மனுவை நுபுர் சர்மா வாபஸ் பெற்றுக் கொண்டார்.

Related Stories: