ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை தலைமை நிலைய செயலாளர் என மாற்றினார் எடப்பாடி பழனிசாமி : அதிர்ச்சியில் ஓபிஎஸ்

சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடந்த 3 வாரமாக உச்சக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி அணியினர் அதிரடியாக அறிவித்தனர்.தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை நிலைய செயலாளராக செயல்பட்டு வருவதாகவும், ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளராக மட்டுமே நீடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமிக்க வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கவும் எடப்பாடி அணியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற உதவியை நாடியுள்ளார். இதனால், அறிவித்தபடி அதிமுக பொதுக்குழு 11ம் தேதி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சமூகவலைத்தள பக்கமான ட்விட்டரில், அதிமுக பொறுப்பை மாற்றிக் கொண்டுள்ளார். அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு,  தலைமை நிலைய செயலாளர் என்று மாற்றிக் கொண்டார்.எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை மாற்றி இருப்பது ஓ பன்னீர் செல்வம் அணியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Related Stories: