ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்: வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை

ஸ்டாக்ஹோம் : சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்றைய போட்டியில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை அவர் முறியடித்தார். முன்னதாக அவர் 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில் இன்று தன்னுடைய சாதனையையே அவர் முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

Related Stories: