திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை

சென்னை: பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை சென்னை வந்து, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அவர்நேற்று சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

இந்நிலையில் பாஜ சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நாளை சென்னை வருகிறார். இங்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளான பாமக தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவினர் செய்கின்றனர்.முன்னதாக, புதுச்சேரிக்கு செல்லும் திரவுபதி முர்மு அங்குள்ள கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து பேசுகிறார்.

Related Stories: