15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு

பள்ளிப்பட்டு: திமுக 15வது அமைப்புத் தேர்தலுக்காக அதன் நிர்வாகிகள் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திமுக 15வது அமைப்புத் தேர்தல் ஒன்றிய நிர்வாக குழு பதவிகளுக்கு, போட்டியிடும் நிர்வாகிகளிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி,  மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி  முன்னிலையில் நேற்று நடந்தது. இதில், தேர்தல் ஆணையர் துரை சரவணன் தலைமையில் தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வத்துடன் ஆதரவாளர்களுடன் திறண்டுவந்து வேட்பு மனுக்கள் வழங்கினர்.

ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் பதவிகளுக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.என்.சண்முகம், மாவட்ட  பொறுப்பு குழு உறுப்பினர்  மா.ரகு,  ஊராட்சி மன்றத் தலைவர் வி.ஜி.மோகன், மணி ஆகியோர் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய  நிர்வாகிகள் பதவிகளுக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.பழனி  பா.சம்பத், கே.எம்.சுப்பிரமணி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய பதவிகளுக்கு  ஒன்றிய பொறுப்பாளர் சி.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஒரு அணி மட்டுமே  விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் பதவிகளுக்கு  ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், முன்னாள் நிர்வாகி பி.டி.சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Related Stories: