ஆவடி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் மெத்தனத்தால் நோயாளிகள் அவதி

ஆவடி: ஆவடி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான ஓபி சீட்டு தருவதில், அங்குள்ள ஊழியர்கள் மெத்தனம் காட்டி அலைக்கழித்து வருகின்றனர். இதனால் அங்கு சிகிச்சை பெறுவதில் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆவடி மாநகராட்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நோய்களுக்காக புறநோயாளிகள் பிரிவில் ஓபி சீட்டு பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஓபி சீட்டு உள்ளிட்ட பல்வேறு அலுவல் பணிகளை குறைந்தளவு ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கடந்த சில மாதங்களாக புறநோயாளிகளுக்கு ஓபி சீட்டு வழங்குவதில் ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். மேலும், அங்கு குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உள்பட பல்வேறு மருத்துவ ஊழியர்களும் குறிப்பிட்ட நேரங்களில் பணியில் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, ஆவடி அரசு பொது மருத்துவமனையில் தடையின்றி குறுகிய நேரத்தில் ஓபி சீட்டு வழங்கவும், அங்கு நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் வேலை செய்வதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: