ரயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்:  திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து  ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே.பிரீத் உத்தரவின் பேரில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது 35 மூட்டை ரேஷன் அரிசியுடன் நின்றிருந்த ஒரு கும்பல் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடியது. இதைத்தொடர்ந்து 35 மூட்டையில் இருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Related Stories: