ரூ.30,000 மொபைல் ஆப் கடனுக்கு ரூ.3 லட்சம் செலுத்தியும் பெண்ணின் ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியீடு

விழுப்புரம்: விழுப்புரம் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த ஒரு பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் ஆப் மூலம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை தவணை முறையில் முழுமையாக செலுத்திய நிலையில், மேலும் பணம் கேட்டு  மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மிரட்டவே ரூ.3 லட்சம் வரை செலுத்தினார்.

மேலும் பணம் கேட்டு அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. அதை அவர் செலுத்தாததால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், அப்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவரது செல்போனில் இருந்த எண்களுக்கும் அனுப்பியதோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அப்பெண், புகாரின்படி விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார், விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: