நாகர்கோவில் காசியின் லேப்டாப், செல்போனில் 120 பெண்களின் 1,900 நிர்வாண படங்கள், 400 வீடியோக்கள் மீட்பு; ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: காசியின் லேப்டாப் மற்றும் செல்போனில் 120 பெண்களின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவித்தது. இதையடுத்து காசி தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி(27). இவர், பல பெண்களுடன் பழகி ஆபாச புகைப்படங்களை எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி பெண்களிடம், பணம் பறித்து ஏமாற்றியதாக பல புகார்கள் எழுந்தன. சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர்கள், நாகர்கோவில் பெண் இன்ஜினியர் உள்ளிட்ட பலர் காசிக்கு எதிராக புகார் அளித்தனர்.

இந்த வழக்கில் கைதான காசி, பின்னர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் காசியின் தந்தை தங்கப்பாண்டியனும் மகனுக்கு உதவியதாக தகவல் தொழில்நுட்ப சட்டம், கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு கைதானார். இந்த 2 வழக்குகளிலும் ஏற்கனவே ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியான நிலையில், தங்கப்பாண்டியன் தனக்கு ஜாமீன் கோரி இரு மனுக்கள் செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு கூடுதல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘காசியின் லேப்டாப் மற்றும் ஐபோனில் இருந்த பெண்களின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை மனுதாரர் தான் அழித்துள்ளார்.  

லேப்டாப், ஐபோன் மனுதாரரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தடயவியல் போலீசாரின் உதவியுடன் லேப்டாப் மற்றும் ஐபோனில் அழிக்கப்பட்டிருந்த 120 பெண்களின் 1,900 அரை மற்றும் முழு நிர்வாண படங்களும், 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் மீட்கப்பட்டன. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என ஆட்ேசபம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். கந்துவட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரம், 120 ெபண்களை ஏமாற்றியது வீடியோ மற்றும் புகைப்படங்களின் மூலம் உறுதியாகிறது. ஆனால், ஒரு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். தடயவியல் துறையின் உதவியால் மீட்கப்பட்டதில் மட்டும் 120 பெண்களின் 1,900 அரை மற்றும் முழு நிர்வாண படங்களும், 400 ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளன. செல்போனின் பாஸ்வேர்டை கூட கூற மறுத்துள்ளனர்.  

சிபிசிஐடி அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையிலான பல தகவல்கள் உள்ளன. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் அடிக்கடி பல்வேறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வந்துள்ளனர். எனவே, மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. விசாரணை நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோரின் சாட்சியம் பதிவு செய்யும் பணி இன்னும் முழுமையடையவில்லை. எனவே, தற்ேபாதைய நிலையில் ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை எப்போது முடிகிறதோ அப்பது மனுதாரர் தரப்பில் உரிய நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: