ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3,000 ஆண்டு பழமையான தங்க காதணி கண்டுபிடிப்பு

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த பணியை திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். கடந்த  8 மாதங்களாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது அலெக்சாண்டர் இரியா அகழாய்வு செய்த இடத்தில் 30 செமீ ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த அகழாய்வின் அறிக்கையில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது ஆதிச்சநல்லூர் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த காதணி 3000 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரிகத்துடனும், தங்கம் உபயோகிக்கும் அளவுக்கும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையிலும் இருந்துள்ளான் என்பதை இந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் உணர்த்துகின்றன. இதனால் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories: