பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல்

மும்பை: பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குவது வழக்கம். மேலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவார். தலிபான் தீவிரவாதிகளுடன் இந்துத்துவா தீவிரவாதிகளை ஒப்பிட்டு அவர் சொன்ன கருத்து வைரலானது. இந்நிலையில், ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்தக்கடிதத்தில், ‘தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகப் பேசி வந்தால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை மும்பை வெர் சோவா காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஸ்வரா பாஸ்கர், இதுபற்றி புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: