அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.8.37 லட்சம்: இந்து சமய அறநிலைத்துறை கணக்கில் சேர்ப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எல்லையம்மன் கோயில் உண்டியல் வசூல் நேற்று எண்ணப்பட்டது. அதில், ரூ.8.37 லட்சம் வசூலை இந்து சமய அறநிலையத்துறை கணக்கில் உடனே சேர்க்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை கிராமம் உள்ளது. இங்கு, எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில், காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி தலைமையில் நடந்தது. கோயில் செயல் அலுவலர் அமுதா, ஆய்வாளர்கள் பாஸ்கர், சிவகாமி, ஒன்றிய குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர், துணை தலைவர் மல்லிகாமணி, ஏரி நீர் பாசன சங்க தலைவர் வீரராகவன், கோயில் அர்ச்சகர் திருமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர். அப்போது, ரூ.8 லட்சத்து 37 ஆயிரத்து 455 மற்றும் 288 கிராம் தங்கம், 492 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் இருந்தது. இந்த பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை கணக்கில் நேற்று உடனே சேர்க்கப்பட்டது.

Related Stories: