3 பேருக்கு குண்டாஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்கில்  திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களான வேப்பம்பட்டை சேர்ந்த தினேஷ் (29). பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (எ)சந்துரு (30). கடம்பத்தூர் தாலுகா கசவநல்லாத்தூரை சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி புஷ்பராஜ் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி சுதாகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, அவர்களை ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, 3 பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: