வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் அவரது கொள்கையின்படி உருவ வழிபாடு, பூஜை கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

சென்னை: சென்னைஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொண்டர்குல பெருமாள் என்பவர், வள்ளலார் சத்திய ஞானசபையில் உருவ வழிபாட்டுக்கு தடைகோரி கடந்த 2006ல் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை கிளை விசாரித்தது. அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிமன்றம், அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில்,”வள்ளலார் அருளிச் சென்ற 1872ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டு விதிகளில் சொல்லியபடி, ஜோதி தீபம் தகர கண்ணாடியில்தான் காட்ட வேண்டும். எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி காட்ட வேண்டும். என்று வள்ளலார் கூறியுள்ளார். அவர் வகுத்த சட்டத்திட்ட நெறிமுறைகளின்படிதான் இந்த சபை நடத்த வேண்டும். சத்திய ஞான சபையில் வள்ளலார் வகுத்த வழிபாட்டு முறையில் தான் இனி வழிபாடு நடைபெற வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜி.சுப்பிரமணியன் என்பவரும் வள்ளலார் நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினார். இதை எதிர்த்து சபாநாத ஒளி சிவாச்சாரியார் உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, சபையில் வள்ளலார் கோட்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்ற அறநிலையத்துறை உத்தரவு சரியானது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று 2010ல் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சபாநாத ஒளி சிவாச்சாரியார் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி டி.ராஜா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு பிற தரப்பினர் சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வள்ளலாரின் கொள்கை கோட்பாடுகளை தனி நீதிபதி தீர ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, இதில் தலையிட முடியாது. ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதி உத்தரவு சரிதான் என்று தீர்ப்பளித்தனர்.

Related Stories: