தொடக்க கல்வித்துறை எல்கேஜி, யுகேஜி அட்மிஷன் எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது அரசு

சென்னை: அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகள் நடந்து வருகின்றன.

அதில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து, மேற்கண்ட அங்கன்வாடி மையங்களில் கற்றல், கற்பித்தல் பணிகளை  மேற்கொள்ள ஒரு மையத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அந்த வகை  ஆசிரியர்கள் நியமிக்கப்படும்  வரையில் அந்தந்த பள்ளி தலைமை  ஆசிரியர்களே கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 அதன்படி,

* பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகியோரின் உதவியுடன் அந்தந்த மையங்களில் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* 3+ வயதுடைய குழந்தைகளை எல்கேஜி வகுப்பிலும், 4+ வயதுடைய  குழந்தைகள் அனைவரையும் யுகேஜி வகுப்பிலும் சேர்க்க வேண்டும். பிற குழந்தைகள் அங்கன்வாடிக் குழந்தைகளாக பராமரிக்கப்பட வேண்

டும்.

* 2,381 மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள வளங்களை பயன்படுத்தி, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடியில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வர வேண்டும்.

* தலைமை ஆசிரியரை, பெற்றோர் எளிதில் அணுகும் வகையிலும், அவர்களின் சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

* பள்ளிகளில் இருக்கும் கூடுதல் வகுப்பறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் அங்கன்வாடி மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துணவு அளிக்க வேண்டும்.

* அங்கன்வாடி மையங்களில் பணியாளர் பற்றாக்குறை இருந்தால் கலெக்டரை அணுக வேண்டும். தேவைப்படின் பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும்.

Related Stories: