தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் மொபட் செல்போன் திருட்டு

சென்னை: ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையை சேர்ந்த கோமதி (28), திருவல்லிக்கேணியில் உள்ள காஸ் ஏஜென்சி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அண்ணாசாலை உம்முடி பங்காரு நகைக்கடை அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு அங்குள்ள நாய்களுக்கு உணவு அளித்துள்ளார்.அப்போது, அருகில் தனது மொபட்டை சாவியுடன் நிறுத்தி இருந்தார். அதில், அவரது செல்போனும் இருந்துள்ளது. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது செல்போனுடன் மொபட் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த கோமதி இதுபற்றி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: