வழிப்பறி கொள்ளையர்கள் கைது 40 செல்போன்கள் பறிமுதல்

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த கஜலட்சுமி (45), கடந்த 25ம் தேதி தனது வாசலில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இவரது கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். புகாரின் பேரில் மாதவரம் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர். அதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (30), திருவள்ளூரை சேர்ந்த சிபி (25) ஆகியோர், பைக் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பதை  தொடர்ச்சியாக செய்து வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு உடந்தையாக அரும்பாக்கத்தை சேர்ந்த முகமது நியாஸ் (30), செல்வகுமார் (எ) அப்துல்லா (34), ஜமால் (42), சையத் இப்ராகிம் (30) ஆகியோர் செயல்பட்டதும் தெரிந்தது. அவர்களையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 8 சவரன், 3 பைக், 40 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: