போலீஸ் போல் நடித்து வழிப்பறி

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஐஸ்கிரீம் கடையில் விகாஷ் (22) மற்றும் ராகுல் (21) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருவரும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தங்களது அறைக்கு சென்று கொண்டிருந்தனர். திருமலை பிள்ளை சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்து செல்லும் போது, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த 4 பேர் ‘நாங்கள் போலீஸ்’ என கூறி விகாஷ் மற்றும் ராகுலிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை மிரட்டி பறித்து கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் சம்பவம் குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தப்பி சென்ற 4 பேர் கொண்ட வடமாநில கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: