முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது

நாமக்கல்: நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைகுட்டை மேட்டில், வரும் 3ம்தேதி திமுக சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாடு, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக பொம்மகுட்டைமேட்டில் 400 அடி நீளம் மற்றும் 240 அடி அகலத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில், பந்தலில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முன்னணியினர் என அனைவரும் அமர, தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் முகப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தல் மற்றும் முகப்பு தோற்றம் காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: