காஷ்மீரில் ஜி20 மாநாடு சீனா கடும் எதிர்ப்பு

பீஜிங்: காஷ்மீரில் இந்தியா ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டுக்கான ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதை ஜம்மு காஷ்மீரில் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சீனாவும் நேற்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. சீன வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அளித்த பேட்டியில், ‘காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. இது, இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்னை. இதற்கு ஐநா தீர்மானத்தின்படி பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். இதுபோன்ற நிலையில், இப்பிரச்னையை சிக்கலாக்க கூடிய எந்த செயலையும், சம்பந்தப்பட்ட நாடுகள் (இந்தியா) செய்யக் கூடாது. இந்த மாநாட்டில் சீனா பங்கேற்பது பற்றி ஆராய்ந்து முடிவு செய்யப்படும்,’’ என்றார்.

Related Stories: