அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ(3)) துறை நாள்.14.06.2018-ல் வெளியிடப்பட்டன.

மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு நகர் ஊரமைப்பு இயக்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: