நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி

அபுஜா: நைஜீரியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி இறந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் லாகோஸ்-இபடான் நெடுஞ்சாலையில் ஒரு பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பஸ் தீப்பிடித்தது. குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உடல் கருகி இறந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி அந்நாட்டின் தெற்கே அமைந்த ஆகன் மாகாணத்தின் மத்திய சாலை பாதுகாப்பு படையின் உயரதிகாரி அகமது உமர் கூறும்போது, ‘ஆகிர் நகரில் சென்று கொண்டிருந்த பஸ் இயந்திர கோளாறால் தீப்பிடித்தது. இதில் 5 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’ என்றார்.

Related Stories: