ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நூறாண்டு பழமையான மரங்கள் வெட்டி அகற்றம்

ஆலங்குடி: ஆலங்குடி தாலுக்கா அலுவலகத்தில் இருந்த நூறாண்டு பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.ஆலங்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் சுமார் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் இருந்தன. இதனால், அப்பகுதி முழுக்க குளுமையான நிழலையும், நுாற்றுக்கணக்கான பறவைகளுக்கு வாழிடத்தையும் அளித்து வந்தன.

மேலும், கடந்த சில மாதங்களாக தாலுகா அலுவலக கட்டடம் மராமத்து பணிகள் செய்யப்பட்டது. இந்நிலையில், தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த மரம் துண்டு துண்டாக வெட்டி அகற்றப்படுவது பலருக்கும் தாங்க முடியாத வேதனையை அளித்துள்ளது.

Related Stories: