×

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: இன்று இரவு 7.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஏக்நாத் ஷிண்டே..!

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே நேற்றிரவு ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜ தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இதனிடையே ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர்
மாளிகைக்கு தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் சிண்டே வந்தனர்.

அப்போது பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஆகியோருக்கு கவர்னர் பகத்சிங் கோசியாரி இனிப்பு ஊட்டினார். இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தியது பாஜக. மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

பதவியேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும்; சிவசேனா, பாஜக உறுப்பினர்கள் அமைச்சர் ஆகின்றன. ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன்.ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கும். மராட்டிய மாநிலத்தில் 105 எம்எல்ஏக்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. 2019ல் பாஜக ஆட்சி அமைப்பதையே மகாராஷ்டிரா மாநில மக்கள் விரும்புகின்றனர். பால் தாக்கரே கொள்கைகளுக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன. சிவசேனா, காங். கூட்டணி ஆட்சியின் செயல்பாடு இந்துத்துவா, சாவர்க்கரை அவமதிப்பதாக இருந்தது. எனவும் கூறினார்.


Tags : Maharashtra ,Eknath Shinde , Sudden turn in Maharashtra politics: Eknath Shinde to take over as Chief Minister tonight at 7.30 pm ..!
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...