திருச்சியில் வாகன கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

திருச்சி: முசிறியில் வாகன கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவனுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் வழங்கியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவகாசம் கொடுக்காமல் மாற்றுச்சான்றிதழை கொடுத்து அனுப்பியதாக பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி அருள்மணி மற்றும் முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன் விசாரணை நடத்தினர்.

Related Stories: