ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம்  ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகிய படைப்புகளுக்கான பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர்களின் சிறந்த படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளை தேர்வு செய்து, அப்படைப்புகளுக்கு ரூ.50,000 பரிசுத்தொகையாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது மேற்காணும் பரிசுத்  தொகையானது 2022-2023-ஆம் நிதியாண்டு முதல் ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: