×

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக சில மாதங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது.   

அதன் அடிப்படியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி,பாலிடெக்னிக் அல்லது ஐடிஐ-யில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு பெயர் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் வாயிலாக தகுதியான மாணவிகளின் தங்களின் பெயர்களை www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து இன்றுடன் இந்த கால அவகாசம் முடியவிருந்த நிலையில், ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 14417-ல் தொடர்புகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ரூ.1000 உதவித் தொகை பெற இதுவரை சுமார் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Extension of opportunity for the scheme of providing financial assistance of Rs.1000 per month to students in higher education
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...