சென்னையில் முதன் முறையாக மகளிருக்கான டென்னிஸ் போட்டி: செப். மாதம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் செப்டம்பர் மாதம் முதன் முறையாக சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. சென்னையில் தற்போது டென்னிஸ் விறுவிறுப்பான விளையாட்டாக மாறிவிட்டது. கொரோனா பெருந்தொற்றால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலகமே பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் குறிப்பாக டென்னிஸ் வீரர்கள் வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஐந்து ஆண்டுகள் மந்தநிலைக்குப் பிறகு தமிழகத்தில் டென்னிஸ் மீண்டும் வலுவடைந்து வருகிறது.

ஒரு வீரர் ஊக்கப்படுத்துபவர் மற்றும் மனிதாபிமானமிக்கவர் மற்றும் டென்னிஸ் விளையாட்டில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்) மற்றும் லண்டனில் உள்ள சர்வதேச ஹால் ஆஃப் ஃபேம் ஆகியவற்றின் தங்க சாதனை விருதினை சமீபத்தில் பெற்றவரான பிரபல இந்திய விளையாட்டு ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ், தற்போது தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் (டிஎன்டிஏ) தலைவராவார். அவர் தனது துவக்கவுரையில் “ஏடிபி நிகழ்வு தமிழகம் மற்றும் நமது நாட்டில் டென்னிஸ் விளையாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

உலகின் தலைசிறந்த வீரர்கள் சென்னைக்கு வருகை தந்ததோடு மட்டுமல்லாமல் நமது சொந்த வீரர்களான வியாண்டர் பயஸ் மகேஷ்பூபதி, சோம்தேவ் மற்றும் ராம்குமார் ஆகியோர் உலக அரங்கிற்கு செல்ல உள்ளுரில் நடைபெற்ற இந்த அரிய வாய்ப்பை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொண்டனர். 2018 இல் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் (டிஎன்டிஏ) தலைவராக நான் இருந்தபோது எனது சொந்த ஊரான சென்னையில் ஒரு பெரிய நிகழ்வை கட்டாயமாக மீண்டும் நடத்த வேண்டும் என்பது சங்கத்தின் விருப்பம் மட்டுமல்ல எனது தனிப்பட்ட விருப்பமுமாகும். இதனால் வீரர்கள், நிர்வாகிகள் பயிற்சியாளர்கள்.

இளைய தலைமுறையினர் என அனைவரையும் அத்தகைய போக்கு ஊக்குவிக்கிறது மாநிலத்தில் விளையாட்டை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் தொடர்ந்து டென்னிஸ் விளையாடுங்கள். டென்னிஸ் விளையாட்டில் ஆண் பெண் இருபாலரும் தமிழ்நாட்டின் ஆதிக்கத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல் சுற்றுலா முதலீடு மற்றும் தொழில்துறைக்கான சர்வதேச இடமாக தமிழ்நாட்டை மாற்றவும் அது உதவும். மேலும் சென்னை சர்வதேச அளவில் ஒரு முக்கிய நகரமாக திகழ்கிறது. கோவிட தொற்றுநோய் டென்னிஸ் விளையாட்டின் செயல்பாடுகளை பெரிதும் பாதித்தது. ஆனால் விடாமுயற்சி மற்றும் விளையாட்டுக்கு தமிழக அரசு அளித்து வரும் வலுவான ஆதரவு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினின் ஆசீர்வாதத்துடன்,

முதன்முறையாக நடத்தப்படவுள்ளது என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் விஜய அமிாதராஜ் கூறினார் சென்னை ஓபன் டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 செப்டம்பர் 12 ஆம்தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நன்கு கட்டப்பட்ட எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் இந்த போட்டியை நடத்த மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யு.டி.ஏ) மற்றும் ஏபிஜி கன்சல்டிங் ஆகிவை எடுத்த முயற்சிகளை நான் பாராட்டியே ஆகவேண்டும். டபிள்யுடிஏ மறுசீரமைக்கப்பட்ட 2008 க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் டபிள்யூ.டி.ஏ 250 நிகழ்வை நடத்தும் நல்வாய்ப்பு இப்போது சென்னைக்கு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள வீராங்கனைகள் அனைவரும் உலக டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு தமிழக அரசு வலுவாக ஆதரவளிப்பதும், மாபெரும் விளையாட்டு நகரம் அமைக்கும் யோசனையை ஊக்குவிப்பதும் விளையாட்டின் மீது அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை காட்டுகிறது. விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையை கவனித்துக்கொள்ளும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் துறையின் செயலாளர் ஆகியோரது ஆதரவு ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

சென்னையில் உள்ள விளையாட்டு அரங்கம் உலகத் தரம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை மேலும் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு மிகவும் அவசியமான நவீன தொழில்நுட்பத்துடன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அது அமைக்கப்படும் என்பதை அரசாங்கம், விளையாட்டுத் துறை மற்றும் எஸ்டிஏடி ஆகியவை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன் சென்னை மாநகரில் உள்ள விளையாட்டு மற்றும் டென்னிஸ் ஆர்வலர்கள் போட்டிகளைக் காண அதிக எண்ணிக் கையில் வருகை தருவார்கள் மேலும் அற்புதமான அனுபவத்தை அனுபவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆடவர் டென்னிஸ் போட்டிக்கு நிகராக மகளிர் டென்னிஸூம் மாநிலத்தில் ஊக்கப்படுத்தப்படும். இத்தகைய சர்வதேச மகளிர் நிகழ்வை நடத்துவது பெண்கள் டென்னிஸை ஊக்குவிப்பதற்கான நீண்டகாலத் தேவையை நிறைவேற்றுவதோடு கல்வி மற்றும் வாழ்க்கை ஆகிய இரண்டிற்கும் டென்னிஸ் பெரிதும் உதவும் என்ற செய்தி மாநிலத்தில் டென்னிஸ் விளையாட்டை விளையாடுவதற்கு அதிகமான பெண்களை ஊக்குவிக்கும் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் என்ற முறையில் வீராங்கனைகளுக்கும் ஸ்பான்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளையாட்டுக்கும் ஒரு சிறந்த நிகழ்வை உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்தளவு சிறப்பாக செயல்படுவோம் என்று உங்கள் ஒவ்வொருவருக்கும் டிஎன்டிஏ சார்பாக உறுதியளிக்கிறோம் பல ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டுக்கு ஆதரவு அளித்தமைக்கு தனிப்பட்ட முறையில் நாள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த மிகப்பெரிய விளையாட்டு போட்டிக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க மெகா நிகழ்வை வீரர்கள் அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றுவதற்கு டிஎன்டிஏ எந்தாரு வாய்ப்பையும் விட்டுவிடாது என்று கவுரவச் செயலாளர் திரு. பிரேம்குமார் கர்ரா நன்றியுரை ஆற்றும் போது மீண்டும் குறிப்பிட்டார்.

Related Stories: