அம்மா உணவக ஊழியர் இடையே குடுமிப்பிடி சண்டையால் பரபரப்பு

சென்னை: சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி (37). இவர்  சாலிகிராமம் வி.வி.கோயில் ெதருவில் உள்ள அம்மா உணவகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். சாலிகிராமத்தில் உள்ள அம்மா உணவகத்தின் பொறுப்பாளராக ராதிகா என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28-ம்தேதி மதியம் தாமரைச்செல்வி சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொறுப்பாளர் ராதிகா, அம்மா உணவகத்தில் பயன்படுத்தப்படும் இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை என்று தாமரைச் செல்வியிடம் கேட்டதாக தெரிகிறது.

இதன்காரணமாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் முடியை பிடித்துக்கொண்டு  கடுமையாக தாக்கிக்கொண்டனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள், அம்மா உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் ஆகியோர் சமாதானப்படுத்தினர். இதில் தாமரைச்செல்வியின் இடது காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: