மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்வு

நோனி: மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோனி காவல் நிலையத்திற்கு வடகிழக்கே உள்ள மகுவாம் பகுதிக்கு அருகே புதன்கிழமை நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 55 பிராந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்களும் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. நுபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 13 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள அனைவரையும் மீட்க முழு வீச்சில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 51 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது இரங்கலை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மணிப்பூர் நோனி அருகே நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும், நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: