மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவத்தூர் மக்கள் கோரிக்கை

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் தேவத்தூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. போதிய நிதி ஒதுக்காததால் பள்ளியின் பின்புறம் மட்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. பள்ளியின் பின்புறம் பெரிய குளம் மற்றும் ஏரி உள்ளது. இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மதுஅருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே காலி பாட்டில்கள், கழிவுகளை போட்டுவிட்டு செல்வதால் மறுநாள் காலை பள்ளிக்கு வரும் மாணவர்கள்  கழிவை அகற்றும் அவல நிலை உள்ளது. எனவே,  மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளியின் பின்புறமும் சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேவத்தூர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: