குடோனில் இருந்த சிகரெட் விற்பனை ரவுடிகளுடன் ரூ. 20 லட்சத்தை பங்கு போட்ட இன்ஸ்பெக்டர்; 3 எஸ்ஐக்கள் சஸ்பெண்ட்

திருமலை: திருப்பதியில் ரவுடிகளுடன் சேர்ந்து சிகரெட் விற்பனை செய்த ரூ. 20 லட்சத்தை பங்கிட்ட இன்ஸ்பெக்டர், 3 எஸ்ஐக்களை திருப்பதி எஸ்பி பரமேஸ்வர்ரெட்டி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் சீனிவாசபுரத்தில் உள்ள 2 அடுக்குமாடி கட்டிடம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கு சொந்தமானது. இக்கட்டிடத்தை சென்னையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிகரெட் பாக்கெட்டுகள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், குடோனை காலி செய்யுமாறு நிஷாந்த் கேட்டுள்ளார். ஆனால், முத்துக்குமார் குடோனை காலி செய்ய முடியாது என்றாராம். இதனால், நிஷாந்த் அதேபகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரான சட்டக்கல்லூரி மாணவர் மணிகண்டா(29) என்பவரிடம் கட்டிடத்தை விற்குமாறு கூறினார். அதன்படி அந்த கட்டிடத்தின் எதிரே வசிக்கும் டாக்டர் ரெஹ்மானுக்கு கட்டிடத்தை கடந்த பிப்ரவரி மாதம் விற்றுள்ளனர்.

விற்பனை செய்ய பிறகும் காலி செய்த மறுத்த முத்துக்குமார், இக்கட்டிடம்  எனக்கு சொந்தமானது. அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது என கூறினார்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 9ம்தேதி மணிகண்டா திருப்பதியை சேர்ந்த இர்பான், மங்களம் பகுதியை சேர்ந்த னிவாஸ் மற்றும் சில ரவுடிகளை அழைத்து சென்று குடோனை காலி செய்தாராம். அப்போது, குடோனில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை விற்றுள்ளார். அந்த பணத்தை திருச்சானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரேஷூ, ராமகிருஷ்ணா, மற்றொரு ராமகிருஷ்ணா ஆகியோர் பங்கு போட்டு கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து திருப்பதி எஸ்பி பரமேஸ்வர்ரெட்டியிடம் சிகரெட் கம்பெனி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்பி உத்தரவின்பேரில் புத்தூர் டிஎஸ்பி விசாரணை நடத்தியதில் மணிகண்டா, இர்பான், னிவாஸ் ஆகியோருடன் 3 எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணத்தை பங்கு போட்டுக்கொண்டது தெரிய வந்தது. மேலும் போலீசார் வன்முறைக்கு துணையாக இருந்ததும், லஞ்சம் பெற்றதும் உறுதியானது. இதையடுத்து எஸ்பி நேற்று இன்ஸ்பெக்டர் மற்றும் 3 எஸ்ஐக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: